மதுரை:
மதுரை மாவட்ட கோயில்களில், தேய்பிறை பஞ்சமியையொட்டி வராஹியம்மனுக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் உள்ள வராஹியம்மனுக்கு, ஆன்மீக பக்தர்கள் குழுவினரால், சிறப்பு அபிஷேக, அர்ச்சணைகள் நடைபெற்றது. கோயில் நிர்வாகிகள் ராமச்சந்திரன், வழக்கறிஞர் எம். ஜெகதீசன், மீனாட்சி பாஸ்கர், செல்வராஜ் மற்றும் ஆன்மீக மகளீர் குழுவினர் கலந்து கொண்டனர்.
இதேபோல மதுரை வைகை காலனி கிழக்கு சக்தி மாரியம்மன் ஆலயம், வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயம், ஜெ. ஜெ. நகர் வர சக்தி விநாயகர் ஆலயம், மதுரை அண்ணாநகர், யாணைக்குழாய் முத்துமாரியம்மன், வரசித்தி விநாயகர் ஆலயங்களில், தேய்பிறை பஞ்சமி வராஹியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அர்ச்சணைகள் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். கோயில்களில் சங்கடம் சதுர்த்தி விழா:
மதுரை:
மதுரை மாவட்டம் கோயில்களில் சங்கடம் சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள் நடைபெற்றது.
மதுரை ஆவின் சாத்தமங்கலம் பால விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம், ஈஸ்வர பட்டர் தலைமையில் நடைபெற்றது. மதுரை யாணைக்குழாய் முத்துமாரியம்மன் ஆலயம், வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்திலும், சித்தி விநாயகர் ஆலயத்திலும், சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.