எப்-35 போர் விமானம் என்பது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாகும். (அதாவது ரேடார் மற்றும் பிற கண்காணிப்பு அமைப்புகளால் கண்டறிவதைத் தவிர்க்க வடிவமைக்கப்பட்ட ஒரு ராணுவ விமானமாகும்).
மேலும் அதன் சூப்பர்சோனிக் வேகத்திற்கு பெயர் பெற்றது இவ்விமானம். தொலைதூர இலக்குகளைத் தாக்குவதில் வெற்றியடைவதன் காரணமாக இது நவீன போர்க்களத்தில் சிறந்த விமானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
லாக்ஹீட் மார்ட்டின் நிறுவன வலைத்தளத்தின்படி, லாக்ஹீட் மார்ட்டின் எப்-35 லைட்னிங்-2, ஸ்டெல்த் தொழில்நுட்பம், மேம்பட்ட சென்சார்கள், ஆயுதத் திறன் மற்றும் தூரம் ஆகியவற்றின் அடிப்படையில், மிகவும் ஆபத்தான போர் விமானம் என்று அறியப்படுகின்றது.
இந்த விமானங்களைத் தயாரிக்கும் லாக்ஹீட் மார்ட்டின் வலைத்தளத்தின்படி, இந்த போர் விமானத்தில் முக்கியமாக மூன்று வகைகள் உள்ளன.
இந்த நிறுவனம் தனது விமானத்தை அமெரிக்க விமானப்படை, மரைன் கார்ப்ஸ் மற்றும் கடற்படை, இஸ்ரேல், பெல்ஜியம், டென்மார்க், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, போலந்து, தென் கொரியா மற்றும் நார்வே உள்ளிட்ட 15 நாடுகளுக்கு விற்றுள்ளது.
அதனையடுத்து, இந்நாடுகளின் விமானப் படைகள் இந்த விமானத்தைப் பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
எப்-35ஏ:
இந்த விமானங்கள் நிலையான ஓடுபாதைகளில் இருந்து எளிதாகப் புறப்படும். அமெரிக்க விமானப்படை இந்த விமானங்களை அதிகம் பயன்படுத்துகிறது.
எப்-35பி:
இந்த விமானங்கள் ஹெலிகாப்டர் போல நேரடியாக தரையிறங்கும் திறன் கொண்டவை. இதன் காரணமாக இந்த விமானத்தால் ஒரு சிறிய இடத்தில் கூட தரையிறங்க முடியும். இந்த திறனின் காரணமாக, இது போர்க்கப்பல்களிலும் தரையிறங்க உதவுகிறது.
அமெரிக்க மரைன் கார்ப்ஸ், இத்தாலிய விமானப்படை மற்றும் ஐக்கிய ராச்சியம் ஆகியவை இந்த விமானங்களைப் பயன்படுத்துகின்றன.
35சி:
இந்த வகையில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் அமெரிக்க கடற்படையின் முதல் ஸ்டெல்த் போர் விமானம் மற்றும் உலகின் ஒரே ஐந்தாம் தலைமுறை போர் விமானமாகும். அவை விமானம் தாங்கிக் கப்பல் நடவடிக்கைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த விமானம் 25 மிமீ பீரங்கி, வான்வழி ஏவுகணைகள் மற்றும் 907 கிலோ வழிகாட்டப்பட்ட குண்டுகளை (குறிப்பிட்ட இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் குண்டுகள்) சுமந்து செல்லும் திறன் கொண்டது.
எப்-35 விமானத்தால் 1.6 Mach அல்லது 1975.68 கிலோமீட்டர் வேகத்தில் பறக்க முடியும், ஏனெனில் அதன் இயந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது.
அது மட்டுமின்றி, ஆயுதங்கள் மற்றும் எரிபொருளுடன் முழுமையாக ஏற்றப்பட்டாலும், எப்-35 விமானத்தால் இந்த வேகத்தை அடைய முடியும்.
இந்த போர் விமானம் ஆக்டிவ் எலக்ட்ரானிக் ஸ்கேன்டு அரே (ஏஇஎஸ்ஏ) ரேடார், எலக்ட்ரோ-ஆப்டிகல் டார்கெட்டிங் சிஸ்டம் (ஈஓடிஎஸ்) மற்றும் ஹெல்மெட்-மவுண்டட் டிஸ்ப்ளே சிஸ்டம் (எச்எம்டிஎஸ்) போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.
அதன் மின்னணு போர் அமைப்பால், எதிரிகளின் இருப்பிடங்களைக் கண்டறியவோ அல்லது கண்காணிக்கவோ மட்டுமல்லாமல், ரேடார்களையும் முடக்கி தாக்குதல்களைத் தடுக்கவும் முடியும்.
இந்த ரக விமானம் இப்போது இந்தியாவின் கைக்கு வந்திருப்பது, சீனாவினை இந்திய விமானப்படை மிக, மிக எளிதில் எதிர்கொள்ளும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
நிச்சயம் இந்தியா இப்போதைய ஒப்பீட்டில் ராணுவம், கப்பல்படை, விமானப்படை, ஏவுகணை, அணு ஆயுதங்கள் உட்பட அத்தனை பிரிவுகளிலும் சீனாவினை முந்தியே உள்ளது என உலக ஆயுத பிரிவு நிபுணர்கள் உறுதியாக தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்திய பாதுகாப்பு படைகள் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் அசுர பலம் பெற்றுள்ளன என்றும் அவர்கள் பிரதமரை புகழ்ந்து வருகின்றனர்.