திருவள்ளூரில் போக்குவரத்துக்கு இடையூராக இருந்த ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை இடித்தது போல். வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு கண்ணீர் மல்க போராட்டம். போராட்டத்தில் பெண் ஒருவர் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூா் நகராட்சியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சாலை ஓரங்களை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டு இருந்ததால். வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதனால் சில நேரங்களில் நெருக்கடியால் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இதேபோல் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ஆயில் மில் முதல் ஆட்சியா் அலுவலகம் வரையில் சாலை ஓரங்களை ஆக்கிரமித்து செருப்பு கடைகள், துணிக்கைகள், டீக் கடை, மெக்கானிக் கடை, உள்பட பல்வேறு வகையான கடைகள் வைத்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் பேரில் வருவாய்த்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் இணைந்து பத்தியால்பேட்டை பகுதியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
மேலும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை மட்டும் பொதுமக்களையே அகற்றிகொள்ள நெடுஞ்சாலை துறை சார்பில் ஒரு மாதம் கால அவகாசம் கொடுத்து வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் வீடுகளை இழந்து நாங்கள் எங்கு செல்வது என கூறி வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டோர் கண்ணீர் மல்க ஆதங்கத்தை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.