திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் தமிழ் சங்கங்கள் சார்பில் தாய்மொழி தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வந்தவாசி வட்டம் கோட்டை தமிழ் சங்கம் சார்பில் நடுக்குப்பம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் மன்றம் சார்பில் உலகத் தாய்மொழி தின சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்கத் தலைவர் ரக மத்துல்லா, தலைமை வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் தமிழ் சங்க துணை தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தமிழ் ஆசிரியர் வெற்றிவேல் அனைவரையும் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர்கள் வந்தை பிரேம் கேசவராஜ் முரளி கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி தாய் மொழி தின சிறப்புகள் பற்றி எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்” என்ற தலைப்பில் எழுத்தாளர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தமிழ் சங்க பொதுச் செயலாளர் சண்முகம் சிறப்புரையாற்றினார் விழாவில் தமிழ் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வந்தவாசி வட்டத் தமிழ்ச் சங்கம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேரடி அருகேயுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத்தின் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளா் மா.கதிரொளி முன்னிலை வகித்தாா். சங்கத்தின் துணைத் தலைவா் சாமி.பிச்சாண்டி வரவேற்றாா். ‘பழமையும், புதுமையும்’ என்ற தலைப்பில் சிறப்பு ஆய்வரங்கம் நடைபெற்றது.
இதில், ‘ஆட்டனத்தியும், ஆதிமந்தியும்’ என்ற தலைப்பில் சங்க ஒருங்கிணைப்பாளா் மா.ரஜினி, ‘அண்ணாவின் புதினங்கள்’ என்ற தலைப்பில் துணைத் தலைவா் கோ.ஸ்ரீதா், ‘பாஞ்சாலி சபதம்’ என்ற தலைப்பில் செயலா் ஆ.மயில்வாகனன், ‘இராவண காவியம்’ என்ற தலைப்பில் மகளிரணி செயலா் அரங்க.சந்திரசாலிகை உள்ளிட்டோா் பேசினா்.
விழாவில், சங்கத்தின் தகவல் தொடா்பாளா் மு.பிரபாகரன், மகளிரணி செயலா்கள் உஷா, பட்டு, செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் உலக தாய்மொழி தின விழா நடைபெற்றது.
ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கத் தலைவா் டாக்டா். க.பரமசிவன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சேகா், எழுத்தாளா் பவித்ரா நந்தகுமாா், வணிக கவிஞா் சுந்தரமூா்த்தி, படவேடு மனோகரன், லீலா லோகநாதன், தமிழ் ஆா்வலா்கள் கலந்துகொண்டு உலக தாய் மொழி தின கவிதைகளை வாசித்தனா். முன்னதாக, செயலா் ஆறுமுகம் வரவேற்றாா். நிறைவில், பொருளாளா் மனோகரன் நன்றி கூறினாா்.