Close
பிப்ரவரி 23, 2025 3:56 காலை

தென்காசி,வேதம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்..!

நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் மாணவிக்கு பரிசு வழங்கிய சிறப்பு விருந்தினர்

தென்காசி மாவட்டம், வேதம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியும் இணைந்த ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டது.

தென்காசி முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை தாங்க, தென்காசி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜெயப்பிரகாஷ் ராஜன் முன்னிலையில் முன்னாள் மாணவ மாணவியர்களை ஒன்றிணைத்து விழா ஏற்பாட்டினை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

தென்காசி வட்டார கல்வி அலுவலர் இளமுருகன் வரவேற்புரை வழங்க முன்னாள் மாணவர்கள் மேளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து 100 மரக்கன்றுகளுடன் குத்துவிளக்கு பழங்களுடன் சீர்வரிசை பொருட்களை பள்ளிக்கு முதன்மைக் கல்வி அலுவலரிடம் வழங்கினார்கள்.

பள்ளிக்கு இடம் வழங்கிய குடும்ப உறுப்பினர்கள், முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள், இந்நாள் ஆசிரியர்களுக்கும் பள்ளித் தலைமை ஆசிரியர் உஷாராணி பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள். குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், தென்காசி வட்டார கல்வி அலுவலர் சண்முகசுந்தர பாண்டியன், பள்ளி மேலாண்மை குழு மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் நூற்றாண்டு திருவிழா கேடயம் முன்னாள் மாணவர்கள் மூலமாக சிறப்பு செய்து வழங்கப்பட்டது.

பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் யோகா போன்ற சிறப்பு நிகழ்ச்சியும் நூற்றாண்டு விழா மேடையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளி நிர்வாகம் செய்திருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top