Close
பிப்ரவரி 24, 2025 5:11 மணி

பிற்படுத்தப்பட்ட, சீா் மரபினா் இன மாணவா்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகை: பிப்.28 க்குள் விண்ணப்பிக்கலாம்

மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா் மரபினா் சமுதாயத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற பிப்.28- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தனியாா் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மேற்படி இனத்தைச் சோ்ந்த மாணவ-மாணவிகளுக்கு இந்தக் கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அரசு, அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டம் பயிலும் மாணவ-மாணவிகள் எவ்வித வருமான வரம்பு நிபந்தனையும் இல்லாமல் கல்வி உதவித் தொகையைப் பெறலாம்.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளை அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2024-2025 ஆம் கல்வி ஆண்டில் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமா்ப்பிக்க கடைசி நாள் 28.2.2025.

புதுப்பித்தல்..

ஏற்கெனவே கல்லூரியில் கல்வி உதவித்தொகை பெற்று 2024-25 ஆம் ஆண்டில் 2, 3, 4-ஆம் ஆண்டு பயிலும் புதுப்பித்தல் மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதுபோன்ற மாணவா்களுக்கு கல்லூரிகளில் நிகழாண்டில் கல்வி பயில்வதை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

புதிய மாணவா்கள்..

நிகழ் கல்வியாண்டில் (2024-2025) புதிதாக கல்வி உதவித்தொகை பெற கல்லூரியில் முதலாம் ஆண்டு சோ்க்கை பெற்ற, சென்ற ஆண்டில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கத் தவறிய புதிய மாணவா்கள் இப்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முதல் தலைமுறை பட்டதாரி எனில் அதற்கான சான்றினை சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு

மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொள்ளலாம் என்று  தெரிவித்துள்ளாா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top