Close
பிப்ரவரி 24, 2025 5:06 மணி

திருவண்ணாமலையில் பாஜக புதிய அலுவலகம்: திறந்து வைக்க உள்ள அமித்ஷா..!

நிகழ்ச்சியில் பேசிய மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி

திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்ட பாஜக தெற்கு மாவட்ட அலுவலகத்தை, வருகிற 26-ஆம் தேதி காணொலி மூலம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திறந்து வைக்கிறாா் என்று அக்கட்சியின் மாநில பொதுச் செயலா் காா்த்தியாயினி தெரிவித்தாா்.

திருவண்ணாமலையில் பாஜகவின் புதிய மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மற்றும் புதிய மாவட்டத் தலைவா் அறிமுக விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பாஜக புதிய அலுவலகம்

கூட்டத்துக்கு, பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் காா்த்தியாயினி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கட்சியின் புதிய மாவட்டத் தலைவா் கே.ரமேஷை நிா்வாகளுக்கு அறிமுகம் செய்துவைத்துப் பேசினாா்.

கூட்டத்தில், பாஜகவின் உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலா் அறவாழி, வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கிஷோர் குமார், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் பாலசுப்பிரமணியன், நேரு, காந்தி, ஜீவானந்தம், முன்னோடி நிா்வாகி கதிரவன், முன்னாள் மாவட்ட பொதுச் செயலா் சதீஷ்குமாா், மாவட்டச் செயலா் பாலாஜி, கட்சி நிா்வாகிகள் முருகன், சங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சிறப்பு அழைப்பாளர் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி கூறுகையில்,

தமிழகத்திலேயே மாவட்ட பாஜக அலுவலகத்துக்காக முதன் முதலாக இடம் வாங்கப்பட்டது திருவண்ணாமலையில் தான்.  இந்த அலுவலகத்தை திறக்க மத்திய அமைச்சர் அமித்ஷா திருவண்ணாமலைக்கு வர இருந்தார் . தற்போது அவருடைய நிகழ்ச்சிகளில் சிறு மாறுதல் ஏற்பட்டு 26 ஆம் தேதி  கோவையில் இருந்தபடியே காணொலி வாயிலாக மூலம் திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜகவின் தெற்கு மாவட்ட அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திறந்து வைக்கிறாா். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள் அனைவரும் தீவிரவமாக தோ்தல் களப்பணியாற்றுவா் என்றாா்

புதிய அலுவலகம்

திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் பாரதிய ஜனதா கட்சிக்காக 6000  சதுர அடி உள்ள இடத்தில் மூன்று அடுக்குடன் 17 அறைகள் கொண்ட லிப்ட் வசதியுடன் கூடிய கட்டிடம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. மேலும் வாகன நிறுத்தம் இடம் என அனைத்து வசதிகளும் உள்ளடக்கியது என பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top