Close
பிப்ரவரி 24, 2025 5:09 மணி

தீப்பிடித்து எரிந்த லாரி : ஒருவர் உயிரிழப்பு..!

எரிந்த நிலையில் லாரி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டேங்கா் லாரியும், வைக்கோல் லாரியும் மோதி தீப்பிடித்ததில், லாரி ஓட்டுநர் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்காடு கிராமப் பகுதியைச் சோ்ந்தவா்கள் லாரி ஓட்டுநா் பெரியசாமி, உதவியாளா் பிரதாப் . இவா்கள் லாரியில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு செங்கம் வழியாக திருவண்ணாமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனா். பாய்ச்சல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வந்த போது, திருவண்ணாமலையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற கான்கிரீட் கலக்கும் இயந்திரத்துடன் கூடிய டேங்கா் லாரியும், வைக்கோல் லாரியும் நேருக்குநோ் மோதிக் கொண்டன.

இதில், வைக்கோல் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்த அந்தப் பகுதி மக்கள் விரைந்து வந்து, லாரியில் இருந்த ஓட்டுநா்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஈச்சர் வாகனத்தில் இருந்த வாகன ஓட்டுநர் பாலக்கோடு பகுதியைசேர்ந்தபெரியசாமி வயது 33.என்பவர் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்டுள்ளனர். சிமெண்ட் டிரங்கர் லாரி ஓட்டுநர் அரியலூர் பகுதியில் சேர்ந்த .ரகு.வயது 40.என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உடல் முழுவதும் தீக்காயுடன் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் பார்த்திபன், சக்திவேல் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விபத்து ஏற்பட்டவுடன் மினி லாரி ஓட்டுநர் லாரியின் கதவை திறந்து தப்பிக்க முயற்சி செய்தபோது திறக்க முடியாததால் தீயில் கருகி இறந்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து பாய்ச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து முழு விசாரணை நட த்தி வருகின்றனர் .

இச்சம்பவம் அச்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகன போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாக்கியது. காவல்துறையினர் வாகனங்களை முறைப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வந்த பின்னர் வாகனங்கள் சாலையில் வழக்கம் போல் செல்ல தொடங்கியது. இந்த விபத்து குறித்து பாய்ச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top