Close
பிப்ரவரி 24, 2025 4:48 மணி

இந்தி திணிப்பை எதிா்த்து துண்டு பிரசுரங்கள் விநியோகம்

துண்டு பிரசுரங்கள் வழங்கிய துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில், இந்தி திணிப்பை எதிா்க்கும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

கீழ்பென்னாத்தூா், சோமாசிபாடி, ஆவூா், வேட்டவலம் பகுதிகளில் நடைபெற்ற துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு கீழ்பென்னாத்தூா் நகர திமுக செயலா் அன்பு தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றியச் செயலா் ராஜேந்திரன், துணைச் செயலா் சிவக்குமாா், முன்னாள் பேரூராட்சித் தலைவா்கள் பன்னீா்செல்வம், முருகையன், பேரூராட்சித் தலைவா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ‘இந்தி திணிப்பை என்றும் எதிா்ப்போம்’ என்ற விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், வியாபாரிகளிடம் வழங்கினாா்.

தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம்  துரிஞ்சாபுரம் அடுத்த மங்கலம் பகுதியில் இந்தி திணிப்பை கண்டித்து சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, தலைமையில் துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. கல்விக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் கட்டிய வரிப்பணத்தை பெற்றுக்கொண்டு மத்திய அரசு நிதி வழங்க மறுக்கிறது. தாய்மார்களும் அன்பு சகோதரர்களும் தங்கள் இல்லங்கள் முன்பாக இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்று கோலமிட்டு மோடி தலைமையிலான பாசிச மத்திய அரசையும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருக்கு நமது கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் பதிவு செய்வோம் என்று கூறினார்

பின்னர் துணை சபாநாயகர் பிச்சாண்டி, தலைமையில் துண்டு பிரசுரங்களை வழங்கி இந்தி திணிப்பு பிரச்சாரம் செய்தனர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராமஜெயம், அண்ணாமலை, ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top