Close
பிப்ரவரி 24, 2025 6:19 மணி

இந்தி திணிப்பை கண்டித்து பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு..!

இந்தி எழுத்துக்களை அழித்த திமுகவினர்

இந்தி திணிப்பை கண்டித்து பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் கருப்பு மை பூசி அழித்தார்.

கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய பா.ஜ.க அரசின் கட்டாய இந்தி திணிப்பை கண்டித்து பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டம் நடைபெற்றது.ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை தலைமை வகித்தார்.

முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் கலந்து கொண்டு பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை கருப்பு மை வைத்து அளித்தார். தொடர்ந்து இந்தி திணிப்பை கட்டாயப்படுத்தம் ஒன்றிய பா.ஜ.க, அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

இதில் பொதுக்குழு உறுப்பினர் ஏ .பி . அருள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ, முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன், ,மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் இட்லி செல்வன், தொண்டரணி துணை அமைப்பாளர் சொசைட்டி சுப்பிரமணியன்,

மாவட்ட பிரதிநிதிகள் சமுத்திர பாண்டி, அன்பழகன் ,வளர்மதி ராஜன், ஒன்றிய பொருளாளர் வினை தீர்த்தான்,அறங்காவல் குழு உறுப்பினர் கால சாமி திமுக நிர்வாகிகள் குறும்பலா பேரி டால்டன்,கபில் தேவதாஸ்,அருள்ராஜ்,ராஜேந்திரன், சுரேஷ், ராஜா சிங், கதிரேசன், மேலப்பாவூர் முருகன் அருண் பிரபு,சிவன் பாண்டியன் செட்டியூர் ஹரி கிருஷ்ணன், வழக்கறிஞர் ஹரி, கதிரேசன், முத்து பாண்டி, டேனியல், ரிக்கி கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top