பெரியபாளையம் அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
திருவள்ளூர் வடக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளரும் முன்னாள் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான கே.எஸ். விஜயகுமார் தலைமையில் பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர்.
பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கும், பொது மக்களுக்கும், கடை வியாபாரிகளுக்கு இனிப்பு வழங்கினார். இதில் ஒன்றிய அவைத்தலைவர் விஜயன்,நிர்வாகிகள் சுந்தர்ராஜன், சேகர், கிளைச் செயலாளர்கள் முத்துபார்த்திபன், மகேஷ், சீனிவாசன், உதயகுமார், வெங்கடேசன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து மஞ்சங்காரணை, பகுதியில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அமைத்து மரியாதை செய்தார்.புன்ன னபாக்கம் பகுதியில் வைக்கப்பட்ட படத்திற்கு மாலை அணிவித்து,மலர் தூவி 500 பேருக்கு பிரியாணி வழங்கினார்.