Close
பிப்ரவரி 26, 2025 2:46 காலை

மகப்பேறு குறித்து விழிப்புணர்வு இன்மை: தாய் இறந்த நிலையில் குழந்தை மருத்துவமனையில் அனுமதி

மகப்பேறு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் இருளர் இன மாற்றுத்திறனாளி பெண் பிரசவத்தில் இறந்து நிலையில், பிரசவித்த குழந்தை உயிருடன் இருந்த நிலையில் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே திருப்புலிவனம் கிராமத்தில் மரம் வெட்டும் பணிக்காக வாலாஜாபாத் அருகே ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்த பழங்குடியினர் ரமேஷ் மற்றும் அவரது மனைவி செல்வி. செல்விக்கு கண் காது மற்றும் வாய் பேச முடியாத ஊமை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் இருந்து ரமேஷ் செல்வி உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 10 நாட்களுக்கு மேலாக திருப்புலிவனம் கிராமத்தில் குடிசை அமைத்து தங்கி வேலை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே ரமேஷ் செல்வி தம்பதிக்கு ஓர் பெண் குழந்தை 3 வயதில் உள்ள நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக செல்வி கர்ப்பம் தரித்து, தற்போது நிறைமாதம் கர்ப்பிணி என்பதால் கொட்டகையில் விட்டு விட்டு மற்றவர்கள் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் கர்ப்பிணி பெண்னான செல்விக்கு நேற்று மாலை திடீரென வலி ஏற்பட்டு பிரசவித்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதில் தாய் செல்வி உயிரிழந்துள்ளார்.

பணி முடிந்து ரமேஷ் உள்ளிட்டோர் வந்து பார்க்கையில் செல்வி பிரசவித்து இருந்த நிலையில், குழந்தை அருகில் கிடந்துள்ளது.

இச்சம்பவ தகவல் அருகில் உள்ள கிராமத்துக்கு உள்ள நபர்களுக்கு தெரிந்து உடனடியாக அவர்கள் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் காலைக் குழந்தை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையமாக களியாம்பூண்டிக்கு எடுத்துச் சென்று மருத்துவர்கள் பரிசோதித்து அவரை பராமரித்து வந்த நிலையில், அக்குழந்தை தற்போது செங்கல்பட்டு பச்சிளம் குழந்தை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

இறந்த செல்வியின் உடல் திருப்பலிவனம் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிறந்த குழந்தை பல மணி நேரம் எந்த உணவின்றியும் நல்ல நிலையில் இருந்தது அப்பகுதி மக்கள் மற்றும் அந்த குடும்பத்தினரையும் சற்று நிம்மதி அடைய செய்தது.

அரசு பல்வேறு மகப்பேறு நல திட்டங்களையும் அது குறித்த விழிப்புணர்வு மேற்கொண்ட வந்த நிலையில் இந்த செல்விக்கு சுகாதார துறை மேற்கொண்ட உதவிகள் பணிகள் என்ன என்பதும், இவரின் நிலையை தொடர்ந்து கண்காணித்தனர் என்பதும், இதுபோன்ற நிறை மாதத்தில் அதுவும் மாற்றுத்திறனாளி பெண்ணை விட்டு சென்ற இவர்களுக்கு விழிப்புணர்வு இல்லையா என பல கேள்விகளை எடுத்துரைத்த நிலையில், இனி ஒருபோதும் இதுபோன்று நடக்கக்கூடாது என அனைவரும் இதை ஒரு விழிப்புணர்வாக எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top