50 வது பொன்விழா ஆண்டு கலை விழாவில் நடனமாடி அசத்திய செவித்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன் குறையுடையோர்க்கான அரசு உயர்நிலைப் பள்ளி சதாவரம் பகுதியில் பேரறிஞர் அவர்களால் 1975-ல் துவங்கப்பட்டு படிப்படியாக தற்போது உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் 50வது ஆண்டு நிறைவை ஒட்டி பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் பள்ளி தலைமையாசிரியர் வள்ளி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பள்ளிக்கு வந்த மாவட்ட ஆட்சியருக்கு பூங்கொத்துக் கொடுத்து வரவேற்ற பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆண்டு விழா கலையரங்கத்திற்கு அழைத்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவ மாணவியர்கள் திரைப்படங்களில் இடம்பெற்ற விவசாயம் மற்றும் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடி அனைவரையும் மகிழ்ச்சியுற செய்தனர்.
மாணவர்களின் நடன அசைவுகள் அனைத்தும் திறன் பட இருந்ததால் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இவர்களது ஆண்டு விழா கொண்டாட்டத்தை பார்க்கும் போது இவர்கள் மாற்றுத்திறனாளிகள் அல்ல .மற்றவர்கள் மன எண்ணத்தை மாற்றும் திறனாளிகள் என இவர்களின் அனைத்து செயல்பாடுகளும் இருந்தது மகிழ்ச்சி அளித்தது.
மேலும் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையினையும் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமணி, அறிவியல் ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியைகள் என பலர் கலந்து கொண்டனர்.