Close
பிப்ரவரி 26, 2025 3:14 காலை

சாம்சங் நிர்வாகத்தில் நடைபெறும் சட்டவிரோத உற்பத்தி மீது அவசர நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை மனு

ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்- தொழிற்சாலை உணவு மற்றும் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் சாம்சங் நிர்வாகத்தில் நடைபெறும் சட்டவிரோத உற்பத்தி மீது அவசர நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை மனு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் இந்தியா நிறுவனம் அமைந்துள்ளது நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் 17 சிஐடியு தொழிலாளர்களை தொழிற்சாலை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது இதனை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது இந்த பேச்சு வார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படாததால் இன்று ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை உணவு மற்றும் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் சாம்சங் நிர்வாகத்தில் நடைபெறும் சட்டவிரோத உற்பத்தி மீது அவசர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முறையீடு செய்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சி ஐ டி அறிவித்திருந்தது

அதன்படி இன்று ஸ்ரீபெரும்புதூர் அங்காளம்மன் கோவில் அருகில் 500க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் சிஐடியு கொடியை கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சாம்சங் தொழிலாளர்கள் 5க்கும் மேற்பட்டோர் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை உணவு மற்றும் பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் சாம்சங் நிர்வாகத்தில் நடைபெறும் சட்டவிரோத உற்பத்தி மீது அவசர நடவடிக்கை எடுக்க கோரி மனு ஒன்றை அளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top