Close
மார்ச் 4, 2025 3:16 காலை

காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியில் 22வது நாளாக சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்

சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரிந்த 23 ஊழியர்களின் பணியிட நீக்கம் திரும்ப பெற கோரியும் , சட்டவிரோத உற்பத்தி போக்கினை கடைபிடிக்கும் நிர்வாகத்தினை கண்டித்து இன்று 22வது நாளாக சாம்சங் தொழிலாளர்கள் காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ளது சாம்சங் இந்தியா நிறுவனம். நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த நவம்பர் மாதம் சிஐடியு தொழிற்சங்க அமைக்க முயன்ற போது போராட்டம் தொடங்கி 30க்கும் மேற்பட்ட நாட்கள் நடைபெற்ற பின் தமிழக அரசு பேச்சுவார்த்தையால் முடிவு பெற்றது.

இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி தொழிற்சாலை சட்ட விதிகளை மீறி செயல்பட்டதாக மூன்று ஊழியர்கள் நிர்வாகத்தால் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் அனைவரும் ஆலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட போது மேலும் 20 ஊழியர்கள் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மீண்டும் போராட்ட தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பேச்சு வார்த்தைகளும் சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் நல அலுவலகத்தில் இரு தரப்பினர்கள் இடையே நடைபெற்று வருகிறது. இதில் எந்த சுமூக தீர்வும் காணப்படாத நிலையில், காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் பகுதியில் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மேலும் இனி அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்த அறிவிப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு அறிவிக்கப்படும் என இக்கூட்டத்தில் சிஐடியு தொழிற்சங்க மாநில செயலாளர் முத்துக்குமார் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top