Close
மார்ச் 1, 2025 5:01 காலை

முதலில் விவசாயி வளரட்டும் அதன் பிறகு கோயில் கட்டலாம்: ஆட்சியர் கண்டிப்பு

விவசாயிகளிடம் பத்து ரூபாய் பிடித்தம் செய்து கோயில் கட்டும் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரியை கண்டித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

இதற்கு முன்பாக வேளாண்மை துறை சார்பில் பல்வேறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மானியத்துடன் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை அலுவலர் தற்போதைய ஒரு இருப்பு மற்றும் விவசாய குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து ஆட்சியர் விவசாயிகளின் குறைகளை கூறுமாறு கூறிய போது, உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த விவசாயி பெருமாள் கூறுகையில், தான் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை உறுப்பினராக இருப்பதாகவும் ஒவ்வொரு டன்னுக்கும் ரூபாய் பத்து விவசாயிகளிடமிருந்து மாலை வளாகத்தில் உள்ள கோயில் மற்றும் பள்ளி வளர்ச்சிக்காக பிடித்தம் செய்வதாகவும், இது விவசாயிகளிடம் கேட்காமல் தன்னிச்சையாக குழு நிர்வாகம் ஈடுபட்டு வருவதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது என தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த சர்க்கரை ஆலை அதிகாரி, நிர்வாக குழு கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் மற்றும் விவசாயிகளின் ஒப்புதலோடு இந்த பணம் பிடிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

கடந்த ஆண்டு மட்டும் 18 லட்சம் ரூபாய் விவசாயிகளிடம் கோயில் கட்ட பணம் பிடிக்கப்பட்டது பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் , உடனடியாக ஆட்சியர் முதலில் விவசாயிகள் வளரட்டும் அதன் பிறகு கோயில் கல்வி என அனைத்தையும் அரசு மேற்கொள்ளும் என அதிரடியாக கூறி உடனடியாக தற்போது இருக்கும் நிலையில் அதனை சரி செய்ய முயற்சிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்தப் பிடித்தம் குறித்து பல பேருக்கு தெரியாத நிலையில், விவசாயிகள் நிலை என்ன என்பது கூட வருத்தம் அளிக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top