Close
மார்ச் 3, 2025 10:09 மணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..!

பொது மக்களுக்குஉணவு வழங்கிய மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம்

தமிழக முதலமைச்சர், திமுக தலைவர் ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுகவினர் சார்பில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இனிப்பு மற்றும் உணவு மாவட்ட அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் வழங்கினார்.

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வழிகாட்டுதல்படி  திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய பேருந்து நிலையம், ஈசானிய திடல், மேற்கு காவல் நிலையம், சண்முகா பள்ளி, ரங்கம்மாள் காது கேளாதோர் நினைவு பள்ளி, கடலைக்கலை மூளை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் 500-க்கும் மேற்பட்ட ஓட்டுனருக்கும், பொது மக்களுக்கும் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இனிப்பு வழங்கியும் உணவு வழங்கியும் திமுகவினர் கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் மெட்ராஸ் கே.சுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் ஷாஜகான், மாவட்ட துணை அமைப்பாளர்கள் எடப்பாளையம் ரவி, அர்சுனன், பாலசுந்தர், ஜெயபிரகாஷ் ,முத்துக்குமார்,அன்பரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.

கீழ்பென்னாத்தூர்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு  கீழ்பென்னாத்தூர் நகர தி.மு.க சார்பில் பல்வேறு இடங்களில் தி.மு.க கொடி ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள், இனிப்புகள்வழங்கப் பட்டன.  அ ப்போது “தமிழைக்காப்போம்”என்ற உறுதிமொழியை விழாவில் கலந்து கொண்ட அனைவரும் ஏற்றனர். தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

மேலும் மேக்கலூர் பகுதியில் உள்ள  முதியவர்கள் ஊனமுற்றோர்கள் விடுதியில் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேரூராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட 15-வது வார்டு சார்பில் 100- க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் டிவிஎம் நேரு அன்னதானம் வழங்கினார் .

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட 15 வார்டு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் காலேஜ் கு.ரவி ஏற்பாட்டில் மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் டிவிஎம் நேரு, ஏழை எளிய, மக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் அருணா ரவி,  வட்டச் செயலாளர்சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர்கள், வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ,வியாபாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top