Close
ஏப்ரல் 25, 2025 12:41 மணி

உத்திரமேரூரில் புகழ்பெற்ற ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் இரண்டாம் நாள் தொப்போற்சவ விழா

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அமைந்துள்ளது சுந்தரவரதராஜ பெருமாள் கோயில். இக்கோயில் திராவிட கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது.

இந்த கோயில் முதலில் பல்லவரால் கட்டப்பட்டது, பின்னர் சோழர்கள், பாண்டியர்கள், சம்பவராயர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் போன்றோரால் திருப்பணிகள் செய்யபட்டது.

இதுபோன்ற பல புகழ்பெற்ற இத்திருக்கோயிலில் இந்த வருடத்திற்கான தெப்போற்சவ விழா திங்கள்கிழமை தொடங்கியது.

திருக்கோயில் வளாகத்தில் இருந்து உற்சவர் சுந்தர வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு பஞ்சவர்ண மலர் அலங்காரத்தில் தெப்பத்தில் மேள தாளம், வாண வாடிக்கையுடன் முழங்க எழுந்தருள, சிறப்பு தீபஆராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து திருக்கோயில் திருக்குளத்தில் முதல்நாள் திங்கட்கிழமை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரண்டாம் நாளான செவ்வாய் கிழமை ஐந்து முறை வலம் வந்தார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பங்கேற்று இறையருள் பெற்றனர். மூன்று நாள் இன்று நடைபெறும் இந்த தெப்ப உற்சவத்தில் இன்று ஏழு முறை வலம் வந்து தெப்போற்சவ விழாவினை நிறைவு செய்வார் என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top