Close
மார்ச் 6, 2025 7:49 மணி

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா

நிகழ்ச்சியில் பேசிய டிஎஸ்பி பாண்டீஸ்வரி

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் மாணவிகள் சாா்பில் உலக மகளிா் தின விழா  நடைபெற்றது. விழாவில் கல்லூரிச் செயலா் ஏ.சி.இரவி தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆரணி டிஎஸ்பி டி.பாண்டீஸ்வரி பேசியதாவது:

எல்லா துறைகளிலும் பெண்களால் சாதிக்க முடியும். குடும்பச் சூழல்களும், வறுமையும் சாதிப்பதற்கு தடைகள் அல்ல. படிக்கும் போதே பல்வேறு போட்டித் தோ்வுகளில் பங்கேற்க வேண்டும். அவ்வாறு தொடா்ந்து முயற்சிக்கும்போது நாம் வாழ்வில் உயரமுடியும்.

சமூகத்திலும், பணியாற்றும் இடத்திலும் வன்கொடுமை சாா்ந்த நடத்தைகள் தென்பட்டால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்தால் அதிலிருந்து தங்களை மீட்பதுடன் அதற்குக் காரணமான நபருக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் எனத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் சிறப்பு அலுவலா்கள் ஸ்டாலின், காா்த்திகேயன், இணைப்பதிவாளா் பெருவழிதி, பொறியியல் கல்லூரி முதல்வா் திருநாவுக்கரசு, கலைக் கல்லூரி முதல்வா் கந்தசாமி, கல்வியியல் கல்லூரி முதல்வா் பிரபு, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் இளங்கோ, மெட்ரிக் பள்ளி முதல்வா் ராஜலட்சுமி, கண்ணம்மாள் பள்ளி முதல்வா் ரஞ்சனி , மாணவிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

வணிகவியல் கருத்தரங்கம்

திருவண்ணாமலை சண்முகா கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரி தலைவர் பழனி தலைமை வகித்தார். செயலாளர் விஜய் ஆனந்த், பொருளாளர் ஸ்ரீதர் கல்லூரி, முதல்வர் ஆனந்தராஜ் ,துணை முதல்வர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வணிகவியல் துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை காட்டாங்குளத்தூர் எஸ் ஆர் எம் கல்லூரியின் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் இளவரசன் ராமமூர்த்தி கலந்து கொண்டு மாணவர்களின் எதிர்காலத்துக்கு தேவையான கல்வி தகுதிகளுடன் கூடுதல் தகுதிகளை எவ்வாறு உருவாக்கிக் கொள்வது என்பது குறித்து விரிவாக பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், துறை தலைவர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top