திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி ஊராட்சியில் ரூ 18 லட்சத்தில் புதிய பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு சரவணன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியம், தலைமை தாங்கினார். மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி முருகையன், அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் புதிய பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பேசியதாவது,
நான் பல்வேறு வளர்ச்சி பணிகள் ஆய்வு செய்ய கடலாடி பகுதியில் வந்தபோது என்னிடம் அப்பகுதி மக்கள் எங்கள் கடலாடி ஊராட்சிக்கு நீண்ட நாட்களாக பயணியர் நிழற்குடை இல்லை என்று நாங்கள் பல்வேறு கோரிக்கைகள் இதற்கு முன்பு இருந்த சட்டமன்ற உறுப்பினர்களிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை வைத்து வந்தோம். ஆனால் இதுவரை யாரும் எங்களுக்கு பயணியர் நிழற்குடை அமைத்துக்கொடுக்கவில்லை. அதனால் இப்போது சட்டமன்ற உறுப்பினராக உங்களிடம் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். எங்களுக்கு புதிய பயணியர் நிழற்குடை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தனர்.
அவர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ 18 லட்சத்தில் புதிய பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாமலை இன்ஜினியர் லட்சுமிபிரியா, முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்ரமணியம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பட்டம்மாள் முனுசாமி, நகர செயலாளர் சௌந்தரரஜன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் முருகதாஸ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் அன்பரசு, முன்னாள் கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா, ஓவர்சீஸ் ஆறுமுகம், ஒன்றிய பொருளாளர் நாவலன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கழக நிர்வாகிகள் அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள நயம்பாடி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் ரூபாய் 7 லட்சத்தில், புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை ஆய்வு செய்த சரவணன் எம்எல்ஏ பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும். விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஒப்பந்தக்காரர்களை கேட்டுக் கொண்டார் .இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.