பட்டு நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் 40க்கும் மேற்பட்ட அரசு பட்டு கூட்டுறவு சங்கங்கள் தமிழ்நாடு அரசு கைத்தறித் துறையின் சார்பாக செயல்பட்டு வருகிறது.
அவ்வகையில், மிகவும் புகழ் பெற்றது காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கம். இந்த சங்கத்திற்கு வள்ளல் பச்சையப்பன் தெருவில் சொந்தமான பகுதியில் லூம் வேல்ர்ட் எனும் விற்பனை வளாகம் கடந்த திமுக ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, 2005இல் அதிமுக ஆட்சியில் இவ்வளாகம் திறக்கப்பட்டு இதில் அரசு பட்டு கூட்டுறவு சங்கங்கள் விற்பனை நிலையத்தை அமைத்து விற்பனை செய்து வந்தது.
நாளடைவில் இந்த விற்பனை நிலையங்கள் தனியார் கட்டமைப்புக்கு கங்கு போட்டி போட இயலாத நிலையில் இவ்வாளகம் மூடப்பட்டது.
இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம் காந்தி சாலையில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்தை இந்த இடத்தில் புனரமைப்பு செய்து மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அவ்வகையில் இப்பணிக வளாகத்தினை புனரமைக்கும் பணிக்காக ரூபாய் 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான துவக்க பணிகள் இன்று அவ்வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
6500 சதுர அடி கொண்ட இந்த வணிக வளாகத்தில் வாகன நிறுத்தும் இடம் மற்றும் விற்பனை இடமும் இதே அளவில் அமைய உள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் எனவும் இவ்வாறாக முழுவதும் குளிர்சாதன வசதி சிற்றுண்டி உணவகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற உள்ளது. தற்போது சராசரி விற்பனை அளவு 50 கோடி உள்ள நிலையில், புதிய சீரமைப்பு பணிகளுக்கு பின் 100 கோடி ரூபாய்க்கு உயரும் வாய்ப்பு உள்ளதாகவும் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 314 பயனாளிகளுக்கு ரூபாய் 53.82 லட்சம் மதிப்பீட்டிலான நல திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கைத்தறித்துறை இயக்குனர் மகேஸ்வரி ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் நெசவாளர்கள் அரசு அலுவலர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.