Close
மார்ச் 10, 2025 1:23 காலை

கிளாரில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மைக்காக ருத்ரயாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே கிளாரில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சிவனடியார்கள் உலக நன்மைக்காக ருத்ரயாகம் நடத்தி அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு செய்தனர்.

காஞ்சிபுரம் அருகே கிளாரில் அமைந்துள்ளது அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் எனும் சிவஸ்தலம். இக்கோயிலில் அகத்தியமுனிவர் தனது மனைவி உலோபமுத்திரையுடன் அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலின் சிறப்புகளைப் பற்றி கேள்விப்பட்டு ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவைச் சேர்ந்த தொழிலதிபர் கோபாலப்பிள்ளை சுப்பிரமணியம் என்பவர் தலைமையில் 44 சிவனடியார்கள் வந்திருந்தனர்.

இவர்கள் அகத்தீஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மைக்காக ருத்ர யாகம் என்ற நடத்தி சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும் வழிபட்டனர்.

இவர்களுடன் பழனி புலிப்பாணிச் சித்தர் ஆசிரமத்தின் நிர்வாகி கௌதம் கார்த்திக் மற்றும் பத்மா மகேஷ் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.ஏற்பாடுகளை அகத்தீஸ்வரர் ஆலய நிர்வாகி மோகன்ராஜ் செய்திருந்தார்.

அகத்தீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்ய வந்தது குறித்து ஜப்பானை சேர்ந்த தொழிலதிபர் கோபாலப்பிள்ளை சுப்பிரமணியம் கூறுகையில் சிதம்பரம், திருவண்ணாமலை உள்ளிட்ட சிவாலயங்களுக்கு சென்று தரிசித்தோம். எங்களுக்கு சித்தர்கள் மீதும் தமிழ்மொழியின் மீதும் மிகுந்த பற்று உண்டு. அகத்திய முனிவர் வழிபட்ட கோயில் என்பதை கேள்விப்பட்டு இங்கு வந்து அகத்தீஸ்வரரை வழிபாடு செய்தோம். உலக நன்மைக்காக ருத்ரயாகமும் நடத்தினோம் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top