Close
மார்ச் 10, 2025 3:58 மணி

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்: 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் முக்கிய ஆன்மீக கோவில்களில் ஒன்றாகும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தருகின்றனர். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கிரிவலம் வருவதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அண்ணாமலையார் கோவிலில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ஆகம விதிப்படி கோவில் நடை திறக்கப்பட்டு உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர்.

அதனை தொடர்ந்து அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிழக்கு திசையில் அமைந்துள்ள ராஜகோபுரம் வழியாக நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்துவிட்டு பின்னர் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே சென்றனர்.

அதிகாலையில் இருந்தே பக்தர்களின் கூட்டம் வெகுவாக அதிகரிக்க தொடங்கியது. இதனால் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பொது தரிசன வரிசையில் சுமாா் 3 மணி நேரமும், கட்டண தரிசன வரிசையில் சுமாா் 2 மணி நேரமும் காத்திருந்து பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

கடந்த சில மாதங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக 6 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். தற்போது தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருவதால் சற்று கூட்டம் குறைந்து இருந்தது.

குறிப்பாக சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் சென்ற பக்தர்கள் மூன்றில் இருந்து இரண்டு மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் கிரிவலம் வந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top