Close
மார்ச் 12, 2025 11:19 மணி

கலசப்பாக்கத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கிய சரவணன், எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கீழ்ப்பாலூர் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலர் சத்யா தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் அண்ணாமலை அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பங்கேற்று கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி பேசியதாவது:

இந்த கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் மக்களை நோய் நொடி இல்லாமல் பாதுகாப்பதற்கும் மக்களுக்கு நோய் வருவதற்கு முன்பே பாதுகாத்து அவர்களின் உடல்நிலை சரி பார்ப்பதற்கும் இந்த கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் மக்கள் நீங்கள் பங்கேற்று தங்களின் உடல்நிலை பாதுகாத்து பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் இந்த முகாமில் இரத்தத்தில் இரும்பு சத்து அளவு, கொழுப்பின் அளவு கண்டறிதல், இரத்த அழுத்த பரிசோதனை, இரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள உப்பு மற்றும் சர்க்கரை அளவு கண்டறிதல், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகள், கண்புரை கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தல், சித்தர் மருத்துவப் பிரிவு மூலம் குழந்தைகள் மருத்துவம் மகப்பேறு மருத்துவம் பொது மருத்துவம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதேபோல் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் மற்றும் இசிஜி எடுக்க தேவையான அனைத்து வசதிகளையும் உங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கர்ப்பிணி தாய்மார்கள் ஸ்கேன் இசிஜி எடுத்து பரிசோதனைசெய்து கொள்ளலாம் என்று கூறி கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

நிகழ்ச்சியில்  மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top