Close
மார்ச் 12, 2025 12:32 மணி

பிரம்மோற்சவ நாள் உற்சவத்தில் பத்ர பீடத்தில் எழுந்தருளி ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த காஞ்சி காமாட்சி அம்மன்

கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் சக்தி பீடங்களில் ஒன்றான ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

இங்கு வருடந்தோறும் மாசி மக பிரம்மோற்சவம் பத்து நாட்கள் வெக்கு விமர்சையாக நடைபெறும் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் பல்வேறு மலர் மாலைகள் சூடி காஞ்சி ராஜ வீதியில் காஞ்சி காமாட்சி அம்மன் வலம் வருவது வழக்கம்.

அவ்வகையில் பிரம்மோற்சவ விழா கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் நடைபெற்று வருகிறது. எட்டாம் நாள் காலை உற்சவத்தில் பத்திர பீடத்தில் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் லக்ஷ்மி தேவி சரஸ்வதி உடன் எழுந்துள்ள நான்கு ராஜ வீதிகளில் மேளதாளம் முழங்க வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

காஞ்சி சங்கர மடம் பிடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் சிறப்பு தீபாராதனை கலந்து கொண்டு பங்கேற்று சாமி தரிசனம் கொண்டார்.

எட்டாம் நாள் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் வழிநெடுகிலும் தீப ஆராதனை மேற்கொண்டு காமாட்சி அம்மனை வழிபட்டு இறையருள் பெற்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top