Close
மார்ச் 16, 2025 10:14 மணி

17 வயது சிறுமியை கர்ப்பமாகிய ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை: திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

17 வயது சிறுமியை கர்ப்பமாகிய ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அக்காவின் கணவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1, லட்சம் அபராதம் விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது குடும்பத்துடன் சென்னை சாலவாயல் பகுதியில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடன் தங்கி இருந்த மனைவியின் தங்கையான 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய விவகாரத்தில் ராஜ்குமாரை எண்ணூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அந்த வழக்கு திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி சரஸ்வதி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி சரஸ்வதி குற்றம் நிருபிக்கப்பட்டதால் அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, ராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன் ரூ.1,லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top