Close
மார்ச் 14, 2025 12:51 மணி

ஆபத்தை உணராமல் சேதமடைந்த பேருந்து நிழற்குடையில் காத்திருக்கும் பயணிகள்..

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது பல்லவன் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வேதாசலம் நகர் என பல்வேறு குடியிருப்பு பகுதியில் அதிகம் மிகுந்த நிலையில், பல்லவன் நகர் பேருந்து நிலைய நிழற்குடை காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் அமைந்துள்ளது.

சென்னையில் கடந்த அதிமுக ஆட்சியின் போது கைத்தறித்துறை அமைச்சராக இருந்த வி சோமசுந்தரம் அவர்களின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பேருந்து நிலைய நிழற்குடை அமைக்கப்பட்டது.

இது கடந்த ஒரு வருட காலமாகவே மிகுந்த சேதம் அடைந்த நிலையில் தற்காலிக புனரமைப்பு பணி மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது மீண்டும் அது மிகுந்த சேதமடைந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் அது மிகுந்த சேதமடையும் நிலையில் அந்த ஆபத்தை உணராமல் பயணிகள் அதில் அமர்ந்தும், உறங்கியும் வருகின்றனர்.

மேலும் இந்த நிழற்குடை பின்புறம் செல்லும் கால்வாயில் எந்தவித பிடிப்பும் இல்லாத நிலையில் அமைந்துள்ளது. இந்த ஆபத்து உள்ளதால் உடனடியாக இதனை சீர் செய்ய வேண்டும் என கோரிக்கை எழந்துள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top