Close
மார்ச் 16, 2025 1:48 மணி

ஓட்டை உடைசலுடன் இயக்கப்படும் அரசுப் பேருந்து! பீதியில் பயணம் செய்யும் மக்கள்

தென்காசி மாவட்டம் தென்காசியில் இருந்து ஆலங்குளத்திற்கு சாதாரண பயணிகள் பேருந்து தடம் எண் 27 பி இயக்கப்பட்டு வருகின்றது.
TN74N 1541 என்ற பதிவெண் கொண்ட இந்தப் பேருந்து இயக்குவதற்கு தகுதியற்ற நிலையில் இருந்தும் இதனை சீவி சிங்காரித்து செட் பண்ணி ஆங்காங்கே ஓட்டை உடைசல்களை சரி செய்து இயக்கி வருகின்றனர்.

தினமும் தென்காசி பழைய பேருந்து நிலையத்தில்  இருந்து இயக்கப்படும் இந்த பேருந்தில் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்

பேருந்தில் மேற்பகுதி தான் சேதம் என்றாலும் பேருந்தின் பிளாட்பாரம் பகுதிகளும் ஓட்டை உடைசலாக இருப்பதை ஆங்காங்கே தகரங்களைக் கொண்டு அதனை சீர் செய்துள்ளனர்.

டீசல் டேங்க் அருகே இருக்கும் ஓட்டை சிறு குழந்தைகள் தவறி கீழே விழும் வண்ணமும், அரைகுறையாக பிளாட்பாரங்களில் உள்ள தகரங்கள் கால்களை பதம் பார்க்கும் விதமாகவும் அமைந்துள்ளது

தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அரசு பேருந்துகளை சீரமைப்பதற்காக பல நூறு கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாக தெரிவித்திருக்கும் நிலையில் இது போன்ற தரமற்ற பேருந்துகளை அரசு போக்குவரத்து துறை இயக்காமல் இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top