நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திரைப்பட நடிகை நமிதா தனது கணவருடன் சாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நடிகை நமீதா தனது கணவருடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சிவாச்சாரியார்கள் பிரசாதங்களை வழங்கினார்.
அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள சம்பந்த விநாயகர் மற்றும் அண்ணாமலையர் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்த அவர்கள் பிடாரி அம்மனை தரிசித்ததுடன் வில்வ மரத்தில் சுற்றி வந்து தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து கோவில் ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், பக்தர்கள் என அனைவருடனும் இணைந்து குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். நடிகை நமீதாவுடன் பக்தர்கள் பலர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். திருக்கோவிலுக்கு வந்த பக்தர்களின் குழந்தைகளை தூக்கி கொஞ்சிய நமீதா தனது கையில் வைத்திருந்த தாமரை பூவை குழந்தைக்கு கொடுத்தார்.