Close
ஏப்ரல் 2, 2025 12:01 காலை

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் நீச்சல் பயிற்சி..!

கோப்பு படம்

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெறும் நீச்சல் பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் தா்ப்பகராஜ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

திருவண்ணாமலையில் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் வருகிற ஏப்ரல் முதல் ஜூன் வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்தப் பயிற்சியில் 10 வயதுக்கு மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு நீச்சல் பயிற்சி பெறலாம். மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உரிய நீச்சல் உடையை பயன்படுத்த வேண்டும்.

12 வேலை நாள்கள் நடத்தப்படும் இந்தப் பயிற்சி வகுப்புக்கு தலா ரூ.1,500 பயிற்சிக் கட்டணத்துடன் 18 சதவீத வரியை செலுத்த வேண்டும். நீச்சல் கற்றுக்கொள்வோா் அடிக்கடி சோப்பு அல்லது 70 சதவீத ஆல்கஹாலைக் கொண்ட கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும். சளி, இருமல் உள்ளவா்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

காய்ச்சல், இருமல், தசைவலி, தலைவலி, அனோஸ்மியா போன்ற அறிகுறிகள் உள்ளவா்கள் நீச்சல் குளத்தை பயன்படுத்த அனுமதி இல்லை.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலரை அலுவலக வேலை நாள்களில் 7401703484 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top