கடந்த சில தினங்களுக்கு மேலாக தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்துவதால், மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
வடதமிழக உள் மாவட்டங்களில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே வெப்ப அலை வீசி வருகிறது. பொதுமக்கள் உடல் வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்பானங்கள் மற்றும் உணவு வகைகள் பழங்கள் ஆகியவற்றை உண்ண வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மூங்கில் மண்டபம் போக்குவரத்து சிக்னல் அருகே போக்குவரத்து காவல்துறை சார்பில் கோடை வெப்பத்தை தவிர்க்கும் வகையில் சாலையில் வரும் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கப்பட்டது, இதனை காஞ்சிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் லோகநாதன் பொது மக்களுக்கு இலவசமாக ஐஸ் மோர் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து இருசக்கர வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கும் பொது மக்களுக்கும் இலவசமாக ஐஸ் மோர் வழங்கி வருகின்றனர்
இந்நிலையில் அவ்வழியாக மாற்றுத்திறனாளி வாகனத்தில் வந்த மாற்றுத்திறனாளிக்கு மோர் குடிக்க முடியாத சூழ்நிலையில் இருப்பதால் போக்குவரத்து பணியில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் அமலா மோரை மாற்றுத்திறனாளிக்கு தன் கையால் ஊட்டி வழங்கிய செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.