Close
ஏப்ரல் 5, 2025 1:40 மணி

ஆசிரியா் கூட்டமைப்பினா், அரசு அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்..!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில்  10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி கவனஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பழ.சீனுவாசன் , பிச்சாண்டி,அருள்தாஸ் ,அன்பழகன் ,ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்க, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிதி காப்பாளர் சேட்டு அனைவரையும் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில செயலாளர் அதியமான் முத்து சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி காலம் தாழ்த்தாமல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியர் திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டும் அரசு அலுவலர்களுக்கு வழங்கிய 7வது ஊதியக்குழு நிர்ணயத்தில் 21 மாத நிலுவைத்தொகையினை பணியாளர்களுக்கு வழங்காமல் நிலுவையாக உள்ளதால் அதனை விடுவித்து நிலுவைத்தொகையினை வழங்கிட வேண்டும்.

1.6.2009 முதல் பணியேற்று 7வது ஊதியக்குழுவின் மூலம் ஊதிய கட்டமைப்பில் பாதிக்கப்பட்டு ஓராண்டு காலம் இடைவெளியில் சுமார் ரூ. 15 ஆயிரம் குறைவான மாத ஊதியம் பெறும் இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை கலைந்து ஊதியம் வழங்கிட வேண்டும்.

தலைமை செயலகம் முதல் அனைத்து துறைகளிலுமுள்ள அனைத்து பிரிவு காலிப்பணியிடங்களையும நிரப்பி பதவி உயர்வினையும் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் உள்ளாட்சி பணியாளர்கள் அரசு அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் தமிழ்நாடு வருவாய்த்துறை (குரூப்2) நேரடி நியமன அலுவலர்கள் சங்க நிர்வாகி செந்தில்குமார் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top