Close
ஏப்ரல் 8, 2025 2:58 காலை

விசாரணை அழைப்பாணையை திரும்ப பெற கோரி ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 204 , 205 விதிகளுக்கு பொருந்தாத தனி நபரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கொடுக்கப்பட்ட விசாரணை அழைப்பாணையை திரும்ப பெற கோரி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் கொளத்தூர் ஊராட்சி மன்ற பொறுப்பு தலைவராக வெள்ளரை அரிகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார்.

கொளத்தூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீடு பழங்குடியினர் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இதற்கான தடை உத்தரவு பெறப்பட்டது.

தலைவர் தவிர அனைத்து உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடத்தி அதில் துணைத் தலைவர் பொறுப்பு வகித்து நிர்வாகத்தை நடத்திட அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் பாஸ்கர் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 24 25 சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு விசாரணை மேற்கொள்ள வரும் 16ஆம் தேதி காலை 11 மணிக்கு உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலகத்தில் ஊராட்சி மன்ற பொறுப்புத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணை கடிதம் அனுப்பியது ஏற்புடையது அல்ல எனக் கூறி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொறுப்புத் தலைவர் ஹரி கிருஷ்ணன் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி இடம் அழைப்பாணையை திரும்ப பெற கோரி மனு அளித்தனர்.

கொளத்தூர் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் நடைபெறக்கூடாது என்ற உள்நோக்கத்திற்காக அளிக்கப்பட்ட ஆதாரமற்ற புகார் பொருந்தாத விசாரணை செய்வது சட்ட விதிகளுக்கு உட்பட்டது அல்ல என்பதால் ஆட்சியர் இதனை கருத்தில் கொண்டு அறிவிப்பு கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என ஊராட்சி மன்ற சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top