Close
ஏப்ரல் 16, 2025 5:01 காலை

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழா

விழாவில் பேசிய கிரி எம் எல் ஏ

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட கிளை சார்பில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, சாதனை மகளிருக்கு பாராட்டு விழா, இளஞ்சுடர் மாணவர் விருது உள்ளிட்ட ஐம்பெரும் விழா திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட தலைவர் எழிலன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றசங்கத்தின் மாநில தலைவருமான தியாகராஜன் கலந்துகொண்டு பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை பாராட்டி சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கியதுடன், தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு இளஞ்சுடர் மாணவர் விருது வழங்கியும் கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றசங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன், ஆசிரியர்களின் நலன் கருதி நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே பழைய பென்ஷன் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பார் என்ற நம்பிக்கையில் ஆசிரியர்கள் உள்ளதாகவும், அதேபோல சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு தேதியை 01.04.2025 என மாற்றி அறிவிப்பார் என்ற நம்பிக்கையில் தாங்கள் உள்ளதாகவும் கூறினார்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 53 ஆயிரம் தொகுப்பு புதிய ஆசிரியர்களை ஒரே கையெழுத்தில் காலம் வரை ஊதியத்தில் கொண்டு வந்த பெருமை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிையயே சாரும் என்றும், அரசு ஊழியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைப்பவர் தற்போதைய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் என்றும் பெருமிதமாக பேசினார்.

20 ஆண்டு காலமாக போராடிவரும் அரசு ஊழியர் ஆசிரியர்களிடம் நேசம் மிக்கவர் தமிழ்நாடு முதல்வர் என்றும் விரைவில் கடந்தகாலத்தைப் போன்று தற்பொழுது பென்ஷன் திட்டத்தை அறிவிப்பார் என்றும் தெரிவித்த அவர், இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை தற்போது தமிழ்நாடு முதல்வர் உருவாக்கி பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றார்,

மேலும் விரைவில் அரசு ஊழியர் ஆசிரியர்களையும் திரும்பிப்பார்த்து எங்களது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார் என்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தங்களுக்கு அளிப்பார் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) காளிதாஸ், மாநில துணைத் தலைவர் உலகநாதன், மாநில துணைத் செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top