Close
ஏப்ரல் 19, 2025 8:30 மணி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிரஷர் உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்

தமிழக கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில், 24 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி, இன்று முதல் தமிழகம் முழுதும் கால வரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுதும் உரிய அங்கீகாரம் பெற்று, 3,000 கல் குவாரிகள், 3,000க்கும் மேற்பட்ட மேற்பட்ட கிரஷர் யூனிட்கள் இயங்கி வருகின்றன. இத்தொழிலில், 40,000 வாகனங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.  குவாரிகளில் இருந்து தினமும் சராசரியாக 2 லட்சம் யூனிட் கனிமங்கள் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் டன் அடிப்படையில் அரசாங்கம் எந்த வரியும் விதிக்கக்கூடாது. அரசாங்கம் பழைய கன மீட்டர் முறை பின்பற்ற வேண்டும். ஏனெனில் அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகள் நேரடியாக கன மீட்டர் முறையில் மட்டுமே செய்ய முடியும் என்பதும், டன்னேஜ் முறை தன்னிச்சையானது.

இது இடத்திற்கு இடம் மாறுபடும், கணக்கீடும் அவ்வளவு எளிதானது அல்ல என்பதும் இதில் அதிக அளவில் முரண்பாடுகள் ஈடுபடும் என்பதால் பழைய உத்தரவையே பின்பற்ற வேண்டும் எனவும், கர்நாடகாவை போல புதிய நிலம் தாங்கும் கனிம வரியில் இருந்து சிறு கனிமங்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் .

இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரி , கிரஷர்கள், லாரிகள் என அனைத்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

வேலை நிறுத்தத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் இத்தொழியில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது மட்டும் இல்லாமல் கட்டுமான பணிகளுக்கான கருங்கல் கிரஷர் ஜல்லி எம்செண்ட் ஆகியவை கிடைக்காமல் முற்றிலும் கட்டுமான பணி பாதிக்கும் நிலையில் உருவாகியுள்ளது…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top