Close
ஏப்ரல் 19, 2025 8:28 மணி

புதிய ரேஷன் கடை, திறந்து வைத்த துணை சபாநாயகர்..!

நியாயவிலைக் கடையை திறந்து வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த மங்கலம் பகுதியில் புதிய ரேஷன் கடையையும் காரியமேடையையும் ரூ18 லட்சத்தில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பாரதி ராமஜெயம், ஒன்றிய செயலாளர் ராமஜெயம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிரபாகரன், அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப் பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, புதிய ரேஷன் கடையையும் காரியமேடையையும் திறந்து வைத்து பேசியதாவது;

இந்த மங்கலம் பகுதியில் நான் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு மேற்கொண்டபோது என்னிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். எங்களுக்கு காரியமேடையும் புதிய ரேஷன் கடையும் வேண்டுமென்று என்னிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஊராட்சி குழு நிதியின் கீழ் ரூ 10 லட்சத்தில் புதிய காரியமேடையும் அதேபோல் மாவட்ட ஊராட்சி குழு நிதியின் கீழ் ரூ 8 லட்சத்தில் புதிய ரேஷன் கடையையும் கட்டி அதை மக்கள் பயன்பாட்டிற்கு இப்போது திறந்து வைத்துள்ளோம்.

இதன் மூலம் மக்கள் நீங்கள் ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் தொலைதூரம் சென்று வாங்க வேண்டிய நிலை இல்லாமல் உங்கள் அருகாமையில் இப்போது ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ரேஷன் பொருட்கள் பெற்று மகிழுங்கள். மேலும் இப்பகுதி மக்கள் என்னிடம் காரியமேடை வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அவர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் புதிய காரியமடை அமைத்து அதன் மூலம் மக்கள் ஈமச்சடங்குகள் செய்யும் இடமாக அமைத்து அதற்கு உண்டான அனைத்து வசதிகளையும் அந்த இடத்தில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மக்கள் நீங்கள் பயன் பெறலாம் என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சகாதேவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன், மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள், அலுவலர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top