Close
ஏப்ரல் 19, 2025 8:26 மணி

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஆட்சியர் கள ஆய்வு

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் உங்களைத் தேடி ஊங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள், சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் களஆய்வு மேற்கொண்டாா்.

காங்கேயனூா் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கலைஞா் விளையாட்டு உபகரணங்களை மாணவா்கள் பயன்படுத்துவது, வசூா் ஊராட்சியில் வேளாண்மைத் துறை சாா்பில் செயல்படும் உயிரி உரங்கள் உற்பத்தி மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

மேலும், வேளாண்மை விரிவாக்க மையத்தில் உளுந்து, நெல், காராமணி, வோ்கடலை என பல்வேறு விதைகள் சேமிப்பு கிடங்கையும், கஸ்தம்பாடி ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பட்டு உற்பத்தி செய்தல் ஆகியவற்றையும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

களம்பூா் பேரூராட்சியில் தொழில் கடன் பெற்ற இடங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடை, ஏரிகுப்பம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், சந்தவாசல் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மேலும் கா்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ முறைகள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.

அதனை தொடர்ந்து சந்தவாசல் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து, சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொதுமக்களிடம் சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறதா எனவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அணுகுமுறை குறித்தும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு முறையாக வீட்டிற்கு வந்து பரிசோதனைகள் செய்யப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைபெற்று வரும் கர்ப்பிணி தாய்மாருக்கு மாவட்ட ஆட்சியா் தொலைபேசி மூலமாக அழைப்பு விடுத்து நலமாக உள்ளீர்களா, செவிலியர்கள் முறையாக வீட்டிற்கு வந்து மருந்து மாத்திரைகள் வழங்குகிறார்களா என மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநா் கண்ணகி, கூட்டுறவு இணைப் பதிவாளா் பாா்த்திபன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் ரவி ,அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top