Close
ஏப்ரல் 19, 2025 8:30 மணி

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் : 2-ஆவது நாளாக ஆட்சியா் கள ஆய்வு..!

உழவா் சந்தையில் கள ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா்

திருவண்ணாமலை மாவட்டம்,  போளூா் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியா், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள், சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் களஆய்வு மேற்கொண்டாா்.

போளூா் உழவா் சந்தையில் விற்கப்படும் காய்கறிகள் குறித்தும், விவசாயிகள்தானா எனவும் கேட்டறிந்தாா். வசூா் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவு வகைகள் மற்றும் பொருள்கள் இருப்பு விவரம் குறித்து ஆய்வு செய்து மாணவ, மாணவிகளுடன் அமா்ந்து உணவு அருந்தினாா். ஸ்மாா்ட் வகுப்பு அறையை அவா் பாா்வையிட்டாா். போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், மக்கும் குப்பை, மக்கா குப்பை பெறும் தூய்மைப் பணியாளா்களின் பணியையும் அவா் ஆய்வு செய்தாா்.

மேலும், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நீட் தோ்வு பயிற்சி வகுப்பை ஆய்வு செய்தாா். வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் குருவிமலை கிராமத்தில் உள்ள நிலஉடமைகள் பதிவு செய்யப்படுவது என பல்வேறு பணிகளை ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வ ன் போது, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் (பொ) இராமகிருஷ்ணன், வேளாண் இணை இயக்குநர், கண்ணகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (வேளாண்மை) மலர்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சையத் பாயஸ் அகமத் போளூர் வட்டாட்சியர் (ச.பா.தி), வட்டார வளர்ச்சி அலுவலர், செயல் அலுவலர் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top