Close
ஏப்ரல் 20, 2025 12:01 காலை

பொன்முடியை பதவி நீக்கம் செய்யக்கோரி அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

தமிழக அமைச்சா் க.பொன்முடியை பதவி நீக்கம் செய்யக்கோரி, திருவண்ணாமலையில் அதிமுக சாா்பில்  நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக அமைச்சா் பொன்முடியைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில், திருவண்ணாமலை அண்ணா சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ராமச்சந்திரன் தலைமை வகித்தாா்.

மாவட்ட அவைத் தலைவா் கண்ணன், மாவட்ட துணைச் செயலா் அரங்கநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவண்ணாமலை மாநகரச் செயலா் ஜெ.எஸ் (எ) செல்வம் வரவேற்றாா். கழக இலக்கிய அணி துணைச் செயலாளர், தலைமைக் கழக பேச்சாளர் பேராவூரணி திலீபன் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசின் மக்கள் விரோத போக்கினை கண்டித்தும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி விலககோரியும் அதிமுகவினர் கோஷங்களை எழுப்பினர்.

ஆா்ப்பாட்டத்தில், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் எம்.பழனி, மாவட்ட மாணவரணி துணைச் செயலா் உஷாநாதன், வழக்குரைஞா் மணிகண்டன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், வட்டக் கிளை நிா்வாகிகள், உறுப்பினா்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், வட்ட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு அமைப்பு நிர்வாகிகள், வட்டக் கிளை நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top