திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த தேவனம்பட்டு ஊராட்சியில் திருவண்ணாமலை முதல் தேவனாம்பட்டு வரை புதிய பேருந்து வழித்தடத்தை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை தலைமை தாங்கினார். திருவண்ணாமலை தொமுச மத்திய பொதுச் செயலாளர் சௌந்தர்ராஜன், முன்னாள் மாவட்ட ஊராட்சிகள் துணைத் தலைவர் பாரதி ராமஜெயம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அண்ணாமலை, ஒன்றிய செயலாளர் ராமஜெயம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவராமன், அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப் பேரவை துணைசபாநாயகர் கு.பிச்சாண்டி, புதிய பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைத்து பேசியதாவது;
இந்தப் பகுதியில் நான் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய வந்தபோது இந்த பகுதி மக்கள் திருவண்ணாமலை முதல் தேவனாம்பட்டு வரை பேருந்து வசதி குறைவாக உள்ளதால் எங்களுக்கு இன்னொரு பேருந்து வசதி வேண்டுமென்று கேட்டுள்ளனர். அதன் அடிப்படையில் போக்குவரத்து துறை அமைச்சரிடமும், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுவிடமும் கூறி தேவனாம்பட்டு வழியாக புதிய பேருந்து வழித்தடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இப்போது புதிய பேருந்து வழித்தடத்தை துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருவண்ணாமலை முதல் தேவனாம்பட்டு வழியாக சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த நகரப்புற பேருந்து வசதியில் ஏறி பெண்களின் விடியல் பயணத்தில் பயணம் செய்வதற்கும் மாணவ மாணவிகள் இலவசமாக பயணம் செய்வதற்கும் முதியோர்கள் இலவசமாக பயணம் செய்வதற்கும் இந்த பேருந்து தடம் பயன் பெறுகிறது.
இதில் திருவண்ணாமலை, தேவனாம்பட்டு, பெரிய கிளாம்பாடி, சின்னகி ளாம்பாடி, நார்த்தாம்பூண்டி, ஊதிரம்பூண்டி, நெல்லிமேடு, நாயுடுமங்கலம் , முத்தரசம்பூண்டி, சத்தியபுரம், ஊசாம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் இந்த பேருந்து வழித்தடத்தின் மூலம் பயன்பெறுகிறார்கள். இதன் மூலம் மாணவர்கள் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்காமல் உடனுக்குடன் பேருந்து வசதி வருவதால் சுலபமான முறையில் ஏறி பயணம் செய்து கொள்ளலாம். இது மகளிர்க்கு ஒரு சுலபமான வாய்ப்பாக அமைகிறது ஏனென்றால் மகளிர் விடியல் பயணம் பேருந்து அதுவும் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை சொந்த ஊரு. இந்த பேருந்து வழித்தடத்தை துவங்கி வைக்கப்படுகிறது என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கூறி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பாலு, கிளை மேலாளர் வெங்கடேசன், மற்றும் தொமுச கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.