பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 28 நபர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் கட்சித் தொண்டர்கள் அண்ணாமலையார் கோவிலில் கூட்டு பிரார்த்தனை செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அர்ஜுன் சம்பத்,
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலால் அப்பாவி இந்துக்கள் 28 பேர் உயிரிழந்துள்ளனர், மேற்கு வங்காள மாநிலத்தில் ஆறு ஹிந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர், உயிரிழந்த, கொலை செய்யப்பட்ட இந்துக்களுக்கு அஞ்சலியும் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டவர்,
இந்திய அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் தப்பி செல்லாதவாறு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் , இந்த தீவிரவாதிகளை தங்க வைத்து ஆயுதங்கள் கொடுத்து பயிற்சி கொடுக்கும் பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகும். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுக்க வேண்டும்.
பாகிஸ்தான் மீது உலக அரங்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசாங்கம் கட்டாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேற்கு வங்காள மாநில அரசாங்கம் செயலிழந்து விட்டது. முழுக்க முழுக்க இந்துக்கள் கொல்லப்படுகின்றனர். இந்துக்கள் சிறுபான்மையாக உள்ள மாநிலங்களில் விரட்டியடிக்கப்படுகின்றனர். சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்வதாக குற்றம் சாட்டினார்.
இது போன்ற மாநிலங்கள் மீது பாரத பிரதமர் நரேந்திர மோடி அமித்ஷா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பலர் வேண்டு மென்றே பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும் இந்திய அரசாங்கத்திற்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இது போன்று கருத்து தெரிவிப்பவர்கள் மீது தமிழக அரசாங்கமும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இது போன்ற நேரங்களில் இந்திய அரசுக்கு உறுதுணையாகவும் ராணுவத்திற்கு உறுதுணையாகவும் இருந்து பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி வழங்க வேண்டும். பயங்கரவாதம் வேர் அறுக்க வேண்டும் என்ற ஒட்டுமொத்த சிந்தனையோடு நாடு முழுவதும் ஒருங்கிணை வேண்டும்.
தமிழகத்தில் கல்வித்தரம் குறைந்துள்ளது. உயர் கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறை இரண்டுமே அரசியல் மையமாக மாறிவிட்டது, ஆளுநர் கூட்டக்கூடிய பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என நள்ளிரவில் கதவைத் தட்டி மிரட்டுவதாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆளுநரே குற்றம் சாட்டுவதாக குறிப்பிட்டவர், அந்த அளவுக்கு அரசாங்கம் இருக்கின்றது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் ஒரு மணி நேரம் பேசினார், அவரது பேச்சை முதலமைச்சர் பாராட்டி குறிப்பிட்டு பேசுகிறார். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் சீரழிந்துள்ளது. மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். பள்ளிக்குள் சாதி சண்டைகள் கொலைகள் நடக்கின்றது.
பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய லேப்டாப் இதுவரை மாணவர்களுக்கு வழங்கவில்லை. மத்திய அரசாங்கத்தோடு மோதல் போக்கை கைவிட்டு கல்வியை காப்பாற்ற வேண்டும் மேம்படுத்த வேண்டும். என கேட்டுக் கொண்டார். தமிழ் நாட்டில் கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து. செங்கல் ஜல்லி எம் சாண்ட் உள்ளிட்டவை தட்டுப்பாடாக உள்ளது அதனை உடனடியாக தமிழக அரசு சரி செய்ய வேண்டும், என கூறினார்
இந்நிகழ்வின் போது மாவட்ட இந்து முன்னணி செயலாளர் விஜயராஜ், மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.