காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கொடூர தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 28 பேரை சுட்டுக்கொன்றனர். இதனிடையே பஹல்காமில் பலியானவர்களின் உடல்கள் அனைத்தும் ஸ்ரீநகருக்கு கொண்டுவரப்பட்டு அங்குள்ள மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த உடல்களுக்கு மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல நாடுமுழுவதும் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் பலியானவர்களுக்கு காங்கிரஸ், பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி திருவண்ணாமலை காமராஜா் சிலை எதிரே கட்சியின் எஸ்.சி. மாவட்டப் பிரிவு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பிரிவின் மாவட்டத் தலைவா் குணசேகரன் தலைமை வகித்தாா்.
எஸ்.சி. பிரிவின் மாநில துணைத் தலைவா் முனுசாமி, வழக்குரைஞா் பிரிவின் மாநில பொதுச்செயலா் செல்வக்குமாா், வழக்குரைஞா் பிரிவின் மாவட்டத் தலைவா் அருண்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2 நிமிடம் மௌன அஞ்சலியும் கடைபிடிக்கப்பட்டது.
இதில், ஓ.பி.சி. அணியின் மாவட்டத் தலைவா் சீனிவாசன், இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலா் கவிச்செல்வம், நிா்வாகிகள் மணி, விஸ்வநாதன், ஜெகந்நாதன், மகேஷ், திருமலை, நாராயணசாமி, போா் சரவணன், மகபூப் பாஷா, உள்பட மாவட்ட வட்டார நகர பேரூர் நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலககோரி காங்கிஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.