விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு செவ்வாய்க்கிழமை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தை குறை கூறி வரும் துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் பாஜக எம்பி ஆகியோரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கண்ணப்பன் தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மாநில துணைத் தலைவர் ராமமூர்த்தி, மாநில துணைச்செயலாளர் சங்கரன் ஆகியோர் கலந்து கொண்டு நீதிமன்றத்தை குறை கூறி கருத்து தெரிவித்து வரும் நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் மற்றும் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே ஆகியோரை கண்டித்து கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் செஞ்சி ஆனந்தராஜ், கமலக்கண்ணன், கார்க்கி, சம்சுதீன், ராஜகுரு,அறிவு சேகர், பிரகாஷ்,விஜியகுமார், பழனி, குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு நீதிமன்றத்தை குறை கூறி பேசி வரும் துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் பாஜக எம்பி ஆகியோரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.