Close
ஏப்ரல் 30, 2025 7:59 மணி

நீர் மற்றும் சுகாதார இயக்கம் குறித்து மாவட்ட அளவிலான குழுக்கூட்டம்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற குழுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மாவட்ட நீர் மற்றும் சுகாதார இயக்கம் குறித்து மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் ஊரகம் மற்றும் ஜல்ஜீவன் மிஷன் ஆகிய திட்டங்களை வெற்றிகரமாக திட்டமிடவும், செயல்படுத்திடவும், கண்காணித்திடவும், மேலாண்மை செய்திடவும் மற்றும் நீடித்த நிலையை அடைந்திட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆட்சியர் தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஒருங்கிணைப்புடன் பங்கேற்புத் துறைகளான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், வனம், வேளாண்மை, சுகாதாரம், பழங்குடியினர் நலம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், நீர் வளம், செய்தி மக்கள் தொடர்பு உள்ளிட்ட துறைகளின் மாவட்ட அளவில் முதல் நிலை அலுவலர்கள் கலந்து கொண்ட மாவட்ட நீர் மற்றும் சுகாதார இயக்கம் குழுவின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சியரும், ஒருங்கிணைப்பாளராக திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உறுப்பினர் செயலராக செயற்பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் உறுப்பினர்கள் உள்ளனர்.

மேலும், இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட நீர் மற்றும் சுகாதார இயக்கக் குழுவில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பழங்குடியின மக்கள் வசிக்கும் இடங்களில் தேவையான சுகாதாரம் மற்றும் நீர் தொடர்புடைய பணிகளின் விவரத்தை உடனடியாக குழுவிற்கு அளித்திட தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் நிர்வாக அனுமதி வழங்கி, பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைமேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் .தர்ப்பகராஜ் அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மணி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பிரகாஷ், திருவண்ணாமலை உதவி இயக்குநர் ஊராட்சிகள் வடிவேலன் செயற்பொறியாளர் , தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் முத்துராமன் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top