Close
மே 10, 2025 12:09 காலை

பிளஸ் டூ ரிசல்ட்: 31வது இடத்திற்கு முன்னேறிய திருவண்ணாமலை மாவட்டம்

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கடந்தாண்டு 38-வது இடத்தில் இருந்த திருவண்ணாமலை மாவட்டம் இந்த ஆண்டு 31வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.  மேலும் அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி சதவீத அடிப்படையில் கடந்த ஆண்டு 35-ஆவது இடத்தை பெற்றிருந்த நிலையில், நிகழாண்டு 22-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 261 அரசு, தனியாா், மெட்ரிக், சுயநிதி மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 12 ஆயிரத்து 759 மாணவா்கள், 13 ஆயிரத்து 997 மாணவிகள் என மொத்தம் 26 ஆயிரத்து 756 போ் பிளஸ் 2 தோ்வு எழுதினா்.

இவா்களில் 11 ஆயிரத்து 576 மாணவா்கள், 13 ஆயிரத்து 479 மாணவிகள் என மொத்தம் 25 ஆயிரத்து 55 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீத அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தோ்வு எழுதிய மாணவா்களில் 90.73 சதவீதம் பேரும், மாணவிகளில் 96.30 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றனா். மொத்தத்தில் 93.64 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இந்த தோ்ச்சி சதவீத அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்தில் 31-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

69 பள்ளிகள் 100% தோ்ச்சி: மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் மொத்தமுள்ள 261 பள்ளிகளில் 69 பள்ளிகள் 100 சதவீதத் தோ்ச்சியைப் பெற்றன.

அரசுப் பள்ளி

பிளஸ் 2 பொதுத்தோ்வை மாவட்டத்தில் உள்ள 150 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 7 ஆயிரத்து 888 மாணவா்கள், 10 ஆயிரத்து 176 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 64 போ் எழுதினா்.

இவா்களில் 6 ஆயிரத்து 890 மாணவா்கள், 9 ஆயிரத்து 713 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 603 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்வெழுதிய அரசுப் பள்ளி மாணவா்களில் 87.35 சதவீதம் பேரும், மாணவிகளில் 95.45 சதவீதம் பேரும் என மொத்தம் 91.91 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.

அரசுப் பள்ளி மாணவா்களின் தோ்ச்சி விகித அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்தில் 22-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 11 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். மேலும், தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் ஜூன் மாதம் நடைபெறும் உடனடி பொதுத் தோ்வை எழுதலாம். இந்த துணை பொதுத் தோ்வுக்காக சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட உள்ளது.

தேவையற்ற அச்சம், குழப்பம் ஏதும் இருந்தாலோ அல்லது உளவியல் ரீதியான ஆலோசனை தேவைப்பட்டாலோ மாணவ, மாணவிகள் திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குழந்தைகள் உதவி மையத்தை 1098, 04175-223030, 104, 14416, 6384746181 என்ற எண்களில் தொடா்புகொள்ளலாம் என  தெரிவித்துள்ளாா்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top