திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் தென்மாதிமங்கலம் பகுதியில் எழுந்தருளும் அருள்மிகு ஶ்ரீ பிரம்மாம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோவிலுக்கு பருவதமலை அடிவாரத்தில் சித்ரா பௌர்ணமி வரும் 12ம் தேதி முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பொருட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது காவல்துறை மற்றும் வனத்துறை சார்பாக அதிகளவில் பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடுகள் செய்யவும், காவல்துறை மற்றும் வனத் துறை மூலம் மலை அடிவாரம் பாதிமலை உச்சி போன்ற இடங்களில் உரிய பாதுகாப்பு வசதி அமைத்து மேலும் இடையில் காவல்துறை மூலம் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விளக்குகள், தூய்மை பணிகள், குடிநீர் வசதிகள் குடிநீர் வசதி மக்களுக்கு போதுமான அளவிற்கு குடிநீர் வசதி அமைத்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்
அது மட்டுமல்லாமல் மலை ஏறும் வழியில் பாதி மலை வரை தான் குடிநீர் வசதி உள்ளது . அதற்கு மேல் குடிநீர் வசதி இல்லாததால் குடிநீர் வசதி கடைகள் அமைத்து மக்களுக்கு குடிநீர் வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும், கிரிவலப்பாதையில் தற்காலிக கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்
சுகாதாரத்துறை சார்பாக சுகாதார பணிகள் மற்றும் மருத்துவ முகாம்கள் மலை அடிவாரத்தில் ஒரு மருத்துவ முகாம் பாதி மலையில் ஒரு மருத்துவ முகாம் மலை உச்சியில் ஒரு மருத்துவ முகாம் ஆகிய மூன்று இடங்களில் கட்டாயம் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்.
மின்சாரத்துறை சார்பாக மின்தடை ஏற்படாவண்ணம் ஏற்பாடுகள் செய்வது குறித்தும், தீயணைப்புத்துறை சார்பாக உரிய உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் கூறினார்
போக்குவரத்துத்துறை சார்பாக கூடுதலாக பேருந்து வசதிகள் சென்னையிலிருந்து 15 பேருந்து வசதிகளும் திருவண்ணாமலையில் இருந்து 5 பேருந்து வசதிகளும் போளூரில் இரு ந்து 5 பேருந்து வசதிகளும் செங்கத்திலிருந்து 3 பேருந்து வசதிகள் என முப்பது பேருந்து வசதிகளை சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்
மேலும் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந் நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் இராமகிருஷ்ணன், உதவி வன அலுவலர் வினோத்குமார், தாசில்தார் தேன்மொழி, உதவி செயற்பொறியாளர் பாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், இந்துசமய அறிநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.