Close
மே 12, 2025 11:42 மணி

வந்தவாசி அருகே ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விழா

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சோகத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ யோக நரசிம்ம பெருமாள் கோவிலில் சித்திரை மாத ஸ்ரீ  நரசிம்மர் ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மூலவா் மற்றும் உற்சவருக்கு திரவியங்கள் கொண்டு திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்னா், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் யாக குண்டம் அமைத்து யாகம் வளா்த்து பூா்ணாஹு சமா்ப்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து உலக நன்மைக்காக கூட்டு பிராா்த்தனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும், மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோயிலில் சுவாதி விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஸ்ரீ சம்பந்த கிரி லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலில் வைகாசி பெருவிழா பிரம்மோற்சவ கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா பிரம்மோற்சவம் 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பிரம்மோற்சவ கொடியேற்றும் விழா நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, ஒவ்வொரு நாளும் அம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், யாளி வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும்.

கொடியேற்ற விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். பிரமோற்சவ விழாக் குழுவினா் ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top