திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த வெளூங்கனந்தல் ஊராட்சியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அண்ணாமலை, தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், ஒன்றிய செயலாளர் ராமஜெயம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேரடி நெல் கொள்முதல் நிலையம் கண்காணிப்பாளர் கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பேசியதாவது;
விவசாயிகள் நெல் விநியோகம் செய்வதற்கு அங்கும் இங்கும் அலையாமல் இங்கு அரசு மூலம் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்படுகிறது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தங்களின் நெல்மணிகளை கொண்டு வந்து அரசு வழங்கும் நியாயமான விலையில் உரிய பாதுகாப்புடன் தங்களின் நெல்மணிகளை விற்பனை செய்து கொள்ளலாம். அதேபோல் வியாபாரிகளிடம் நெல்மணிகளை விற்பனை செய்துவிட்டு அலையாமல் தங்களின் நெல் மணிகளை விநியோகம் செய்து மகிழலாம். இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் இந்த வெளூங்கனந்தல் ஊராட்சியில் துவங்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு நாளைக்கு 800 மூட்டைக்கும் மேல் கொள்முதல் செய்யப்படும்,
அதேபோல் இந்தப்பகுதியில் உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பெரியகிளாம்பாடி , சின்னகிளாம்பாடி , நார்த்தாம் பூண்டி , நாயுடுமங்கலம் , முத்தரசன் பூண்டி , ஊசம்பாடி, மாதுளம்பாடி, அதை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த நேரடி கொள்முதல் நிலையத்தின் மூலம் பயன்பெறலாம். அரசின் மூலம் நமது நெல்மணிகளுக்கு நியாயமான விலை செய்து கொடுக்கப்படும் இதன் மூலம் விவசாயிகள் எந்த ஒரு அச்சமும் இல்லாமல் பயன்பெறுங்கள் . வியாபாரிகளை போல் இந்த அரசு நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் நெல்மணிகளை விற்பனை செய்தவுடன் விவசாயிகளை அலைய வைக்காமல் உங்கள் வங்கி கணக்கில் பணம் பரிவர்த்தனையை செய்து கொடுக்கப்படும். அதனால் விவசாயிகள் நீங்கள் முழுமையாகபயன்பெறலாம் என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கூறினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சகாதேவன், மாவட்ட பிரதிநிதி மோகன், அரசு ஒப்பந்ததாரர் பழனி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன், கிளைக் கழகச்செயலாளர்கள் , உள்ளாட் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் நுகர் பொருள் வணிக கழக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.