Close
மே 24, 2025 5:02 காலை

விரைவில் காட்பாடி – விழுப்புரம் இருவழிப்பாதை திட்டம்: எம்பி தகவல்

காட்பாடி விழுப்புரம் இரு வழிப்பாதைக்கான திட்டம் தயாராக உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் துவங்க நிதி ஒதுக்கீடு செய்து அந்த திட்டத்தை கொண்டு வர நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று திருவண்ணாமலை மக்களவை உறுப்பினர் அண்ணாதுரை தெரிவித்தார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி அமிர்த இரயில் நிலைய திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட திருவண்ணாமலை இரயில் நிலையத்தினை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்ததைதொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் , ரயில் நிலையத்தில் கல்வெட்டினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் மரு. எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் எம்.பி சி.என். அண்ணாதுரை பேசியதாவது ;

விழுப்புரத்திலிருந்து காட்பாடிக்கு இரு வழிப்பாதை அமைக்க திட்டம் தயாராக உள்ளது. விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் அந்த திட்டத்தை கொண்டுவர நாடாளுமன்றத்தில் உங்களில் ஒருவனாக குரல் கொடுப்பேன்.

மேலும், தினசரி திருவண்ணாமலையிலிருந்து, சென்னைக்கு பயணிகள் ரயில் விடப்பட்டிருந்தாலும், அதில் கால நேரம் அதிமாக இருப்பதால் மக்கள் சரியான பயணம் செய்யவில்லை. பயண நேரத்தை குறைத்து மக்கள் எளிதாக பயணம் செய்ய கோரிக்கை வைத்துள்ளேன்.

மேலும்  புதிய பயணிகள் ரயில் விழுப்புரம் வழியாகவும் , புதிய எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி வழியாகவும் விரைவில் வர இருக்கிறது. அதற்கான முயற்சி நாங்கள் செய்துகொண்டு வருகிறோம்.

இந்த ரயில் நிலையம் 3-வது வகையில் மாற இருப்பதால், அடிப்படை வசதிகள் எல்லாம் கிடைக்கும் என்றும், ரயில் பயன்பாட்டை அதிகப்படுத்துவதால் ரயில்நிலையம் உயர்ந்து பல்வேறு பணிகள் வருவதற்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம் .

3 வருடத்திற்கு முன்பு ஒரு கோடி வருமானமாக இருந்த திருவண்ணாமலை ரயில்நிலையம், தற்போது 20 கோடிக்கு வருமானம் வருவதால், அனைத்து அடிப்படை வசதிகளுடன் திருவண்ணாமலை ரயில்நிலையம் தரம் உயர்ந்து உள்ளதாக அண்ணாதுரை எம்பி தெரிவித்தார்.

புதுப்பொலிவுடன் திருவண்ணாமலை ரயில் நிலையம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top