உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த லட்சுமி, கருப்பாயி, பாண்டிச்செல்வி உள்ளட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் சொந்த ஊரான குஞ்சாம்பட்டிக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளனர்.
குஞ்சாம்பட்டி பேருந்து நிறுத்ததில் இறங்கி சாலையை கடக்க முயன்ற இந்த 7 பேர் மீதும், தேனியிலிருந்த உசிலம்பட்டி நோக்கி அதி வேகத்தில் வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் , ஒரு வயது பச்சிளம் குழந்தையான பிரகலாதன், ஜோதிகா, லட்சுமி, பாண்டிச்செல்வி என்ற நான்கு பேர் படுகாயமடைந்த உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும், ஒரு வயது பச்சிளம் குழந்தையான கவியாழினி, ஜெயமணி, கருப்பாயி என்ற மூன்று பேர் படுகாயமடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டி.எஸ்.பி .சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்குக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த விபத்து தொடர்பாக தப்பி ஓடிய கார் ஓட்டுநர் பூச்சிபட்டியைச் சேர்ந்த ஆனந்த குமாரை தேடி வருகின்றனர்.
சாலையை கடக்க முயன்ற 7 பேர் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த மற்றும் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.